திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு 2400 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துள்ள நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை துவக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ள நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ளும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்திற்கு என 2400ரேபிட் டெஸ்ட் கருவி வந்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.