தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு இல்லை..! கட்டுபாடுகள் தொடரும் - தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி ( இன்று முதல் ) ஊரடங்கில் சில விஷயங்கள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதனால் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மே 3ஆம் தேதி வரை கடைபிடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 

கொரோனா மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள மாநில அரசு, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை எனவும் மே 3ம் தேதி ஊரடங்கு தொடரும் என்று முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் எனவும் நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...