கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மாநிலத்தில் 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இதில், கோவை பொள்ளாச்சியில் இரண்டு பேர், ஒருவர் வால்பாறையில் ஒருவர், மேலும் இருவர் சிறுமுகையில், என மொத்தம் ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டங்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது , என சுகாதாரத் துறை சார்பில் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.