கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் காந்தி நகர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வால்பாறை முழுமையாக சீல் வைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட அப்பெண், பிறந்து இரண்டே நாள் ஆன குழந்தை மற்றும் அவர் உறவினர் ஆகியோர் கோவை இ எஸ் ஐ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை, தொடர்ந்து வால்பாறையில் காலை முதல் மதியம் 1 மணி வரை செயலப்படடு வந்த அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வால்பாறை அடுத்த ஆனைமுடி எஸ்டேட் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து தற்காலிக செக்போஸ்ட் அமைத்து வெளியிலிருந்து வரும் நபர்களை கண்காணித்து அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கி மஞ்சள் கலக்கிய நீரினை கொண்டு கைகளை சுத்தமாக கழுவிய பின்பு அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.
மேலும், மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று மஞ்சள் கலந்த நீரை தெளித்து வருகின்றனர். கொரோனா வைரஸிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எஸ்டேட் பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.