இந்த நிலையில் இன்று இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவையை சேர்ந்த 10 பேர், திருப்பூரை சேர்ந்த 9 பேர் மற்றும் நீலகிரியை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 23 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர், பூரண குணமடைந்து மருத்துவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து இன்று வீடு திரும்பினர்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்படும் கோவையை சுற்றியுள்ள திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் 280 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவையை சேர்ந்த 10 பேர், திருப்பூரை சேர்ந்த 9 பேர் மற்றும் நீலகிரியை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 23 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து குணமடைந்தவர்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இப்படி குணம் அடைந்தவர்களை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு ராசாமணி, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா ஆகியோர் நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அடுத்த பத்து நாட்களில் இந்த மருத்துவமனையில் இருந்து அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.