கோவை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 49 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 49 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதில் இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும் இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்றும் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், நீலகிரியில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பரிசோதனை மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
