கோவை: கோவை மாநகராட்சியில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுந்தராபுரம், குனியமுத்தூர், பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகள் நடைபெறுவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப. அவர்கள், சட்டமன்ற உறுப்பினா் ஏ.சண்முகம் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சியில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகளின் தொடர்ச்சியாக, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுந்தராபுரம், குனியமுத்தூர் பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில் 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனத்தின் மூலம் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகள் நடைபெறுவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.