கோவையில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

கோவை: கோவையில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: கோவையில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தாண்டி பொதுமக்கள் வெளியே செல்ல கூடாது அதையும் மீறுபவர்கள் மீது காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கறிக்கோழி வியாபாரிகள் சங்கத்தினர் அன்று ஒரு நாள் மட்டும் கடைகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். சில கட்டுப்பாடுகளுடன் ஒரு நாள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் உதகையில் இறைச்சி விற்பனை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை விற்பனை செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அனுமதி அளித்து இருந்தார். சமூக விலகலை எவ்வாறு மக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை பார்த்து 7 நாட்களும் கடைகள் திறக்க அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது.

கோவையில் நெருக்கமான வீடுகள் உள்ள நிலையிலும் அதிக மக்கள் தொகை இருப்பதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் அடுத்த உத்தரவு வரும் இயங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், கோவை அன்னூர் வட்டம் குமாரபாளையம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான இறைச்சி கடையில் தடையை மீறி விற்பனை செய்வதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்ற வருவாய் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் கடைக்கு சீல் வைத்தனர்.

இதனிடையே, கோவையில் ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.



இந்த நிலையில், மதுக்கரையில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டு வந்த இரண்டு இறைச்சி கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

இதேபோல, கோவை பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள சிக்கன் கடையில் அரசின் உத்தரவை மீறி ஆன்லைனில் விற்பனை நடைபெற்று வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...