கோவை: வால்பாறை கேரளா சாலக்குடி சாலையில் வாழைச்சால் கேரள வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பிரதான சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து மழுக்குப்பாறை வழியாக கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. கொரானா தொற்று நடவடிக்கை காரணமாக தமிழக கேரள எல்லை சாலை மூடப்பட்டுள்ளது. உள்ளூர் வாசிகள் மட்டும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாழைச்சால் கேரள வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பிரதான சாலையில் முதலை ஒன்று சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அவ்வழியாக வந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த கேரளா வனத்துறையினர், சாலையில் சுற்றித்திரிந்த முதலையை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆற்று கொண்டுபோய் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கொரானா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆட்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் இல்லாத காரணத்தால் வன விலங்குகள் சாலைகளில் வரும் வாய்ப்புள்ளது. ஆகவே, பொதுமக்கள் மிக கவனமாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.