கோவையில் சாலையில் பிரசவ வலியுடன் துடித்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்; பொதுமக்கள் உதவியுடன் தாயும் சேயும் நலமாக மீட்பு!

கோவை: கோவை பீளமேடு அருகே பிரசவ வலியுடன் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திடீரென வலி அதிகமாகியதையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் சேயும் நலமாக மீட்கப்பட்டனர்.


கோவை: கோவை பீளமேடு அருகே பிரசவ வலியுடன் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திடீரென வலி அதிகமாகியதையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் சேயும் நலமாக மீட்கப்பட்டனர்.

கோவை சிங்காநல்லூர் காவல் எல்லை மற்றும் பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள ரயில்வே கேட் அருகாமையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூடாரம் அமைத்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த குழுவிலுள்ள 26 வயது மதிப்புள்ள இளம்பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவமனை செல்வதற்காக முயன்றபோது வலியால் துடித்துள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு பெண்ணை பாதுகாப்பாக உட்கார வைத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் தகவலறிந்து வந்த எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மீட்பதற்குள் பிரசவம் ஆகும் நிலை தொடங்கியது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸும் பின்னர் வந்தது. 

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் அந்த இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாயையும் சேயையும் பாதுகாப்பாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையின் ஓரத்தில் இளம்பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...