கோவை: வால்பாறை சிஎஸ்ஐ ஆலயத்தின் சார்பாக நலிவடைந்த மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வால்பாறை வட்டாட்சியர் ராஜன், ஆயர் ஜெயராஜ் ஆகியோர் வழங்கினர்.
கோவை: வால்பாறை சிஎஸ்ஐ ஆலயத்தின் சார்பாக நலிவடைந்த மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வால்பாறை வட்டாட்சியர் ராஜன், ஆயர் ஜெயராஜ் ஆகியோர் வழங்கினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று முழு அடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வட மாநில தோட்ட தொழிலாளர்களுக்கும், ரேசன் கார்டு இல்லாத மக்களுக்கும், எஸ்டேட் பகுதிகளில் வறுமைகோட்டில் உள்ளவர்களுக்கு சி.எஸ்.ஐ திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், குருத்துவ செயலர் சுதர்சன் உத்தரவின்படி வால்பாறை சி.எஸ்.ஐ திருச்சபை சார்பாக 200 குடும்பங்களுக்கு அரிசியும், 200 குடும்பங்களுக்கு 2 கிலோ து.பருப்பு, உளுந்து, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வட்டாட்சியர் ராஜன், வால்பாறை தலைமை ஆயர் ஜெயராஜ், ஆகியோர் தலைமையில் பழைய வால்பாறை, வறட்டுப்பாறை, அணலி, சஜிதா எஸ்டேட், உருளிக்கல், பன்னிமேடு, பச்சைமலை, ஊசிமலை, அய்யர்பாடி, வெள்ளமலை, அக்காமலை, கருமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், ஆயர்கள் டேனி, ஜெரின், ஜோஸ்வா ஆலய நிர்வாகிகள் ஜெபராஜ், ஜான்முத்து, சுவாமிதாஸ், பிரின்ஸ், சத்தியராஜ், காட்வின், எட்வின், ஜேஸ்பர், ஜாப்ரி உள்ளிட்ட பலர் பல குழுக்களாக பிரிந்து வழங்கினர்.