கோவையில் கேரளாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு ஊதிய பணம் வாங்கி கொடுத்து உதவிய வருவாய் வட்டாட்சியருக்கு பாராட்டு!

கோவை: கோவையில் கேரளாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு ஊதிய பணத்தை வாங்கி கொடுத்த வருவாய் வட்டாட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை: கோவையில் கேரளாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு ஊதிய பணத்தை வாங்கி கொடுத்த வருவாய் வட்டாட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

கோவையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ஜெயலட்சுமி தம்பதியினர் கவுண்டர் மில் அருகே தங்கி வேலை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இத்தம்பதியினருக்கு 5 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையும் பறிபோனது.

தனியார் நிறுவனம் கொடுத்திருந்த அறையில் தங்கியிருந்து மில்லில் வேலை பார்த்து வந்தனர். தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக வேலை இல்லாத காரணத்தினாலும் வருமானம் இன்றி அவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் கேரளாவிற்கு செல்வதற்கு தமிழக எல்லையான வாளையாறுக்கு சென்ற போது கேரள போலீசார் அவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்களோ அங்கு தான் தங்கி இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உங்களை அனுமதிக்க முடியாது என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உடனடியாக தங்களுடைய சொந்த ஊரான ஆலப்புழாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த தகவலை சமூக வலைதளம் மூலம் அறிந்த வடக்கு வருவாய் வட்டாட்சியர் மகேஷ்குமார் சரவணம்பட்டி காவல் துறையினருடன் பேசி பிரகாஷிற்கு சேர வேண்டிய சம்பளத்தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து, சரவணம்பட்டி போலீசார் தனியார் நிறுவனத்தில் கொடுக்கப்பட வேண்டிய 13,000 ரூபாயை தனியார் முதலாளியிடமிருந்து பெற்றுக்கொடுத்தனர். அவரது குடும்பம் அங்கேயே தங்குவதற்கும் உணவளிக்கவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. வடக்கு வட்டாட்சியர் மற்றும் சரவணம்பட்டி காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...