கோவை: கோவை மாநகரில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 357 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
மேலும், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி போலீசார் தற்போது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகரில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 357 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரியகடை வீதி, ஆர்எஸ் புரம், வெரைட்டி ஹால் ரோடு ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனை போது முக கவசம் அணியாமல் வந்த 58 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 58 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, கோவை புறநகரில் 363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 408 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.