தொழில் கடன்களுக்கான வட்டியை ஆறு மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் - கோவை ஆட்சியருக்கு கார்த்திக் எம்எல்ஏ கோரிக்கை

கோவை: கோவையில், வங்கி கடன்களை செலுத்த இயலாத தொழில்முனைவோர்களின் வங்கி கடன் கணக்குகள், செயல்படா கணக்கு (NPA) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்க உதவிட வேண்டு்ம், தொழில் கடன்களுக்கான வட்டியை ஆறு மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், மாதத் தவணைகளை, செலுத்துவதற்கு 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கோவையில், வங்கி கடன்களை செலுத்த இயலாத தொழில்முனைவோர்களின் வங்கி கடன் கணக்குகள், செயல்படா கணக்கு (NPA) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்க உதவிட வேண்டு்ம், தொழில் கடன்களுக்கான வட்டியை ஆறு மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், மாதத் தவணைகளை, செலுத்துவதற்கு 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசால் நாடு முழுவதும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளது. ஏற்கனவே நலிவடைந்து சிரமப்படுகிற, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இந்த ஊரடங்கு உத்தரவால் எந்த வித வருமானம் இன்றி தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இந்நிலையில், கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் தொழிலை நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் முனைவோர்களுக்கு , கடந்த 27.03.2020 அன்று உயர்திரு பாரத ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்களால் தொழில் முனைவோர்களை பாதுகாக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான வங்கி கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த மூன்று மாத காலங்கள் அவகாசம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வங்கிகளால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பல்வேறு காரணங்களால் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2020 ஆகிய மாதங்களில் தவணை தொகையை கட்ட இயலாமல் இருந்து, மார்ச் 2020 மாதத்திற்குள் கட்டிவிடலாம் என்று தொழில்முனைவோர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், தற்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி 2020 ஆகிய மாதங்களுக்கான தவணை தொகையை கட்டாத தொழில்முனைவோர்கள் ஏப்ரல் 2020 மாத இறுதிக்குள் தங்களது நிலுவை தவணைத் தொகைகளை கட்டாவிட்டால் அவர்களது வங்கி கடன் கணக்குகள் செயல்படா கணக்குகளாக (Non performing account - NPA) அறிவிக்கப்படும் என்று தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளால் அறிவுறுத்தப்படுகிறது. 

எனவே தொழில் முனைவோர்கள் தங்களது கணக்கு செயல்படா கணக்கு பட்டியலில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிகளில் பணத்தை திரட்டி கடன் தவணைகளை கட்டிவிடலாம் என்று முயல்கின்றனர். தங்களது வீடுகள், மனைகள், நகைகள் ஆகியவற்றை விற்றாவது பணம் தயார் செய்து வங்கி கடன் தவணைகளை செலுத்தி விடலாம் என்று முயற்சித்தாலும் கூட அவற்றை வாங்குவதற்கு தற்போது யாரிடமும் நிதி வசதி இல்லாததால், விற்பதற்கும் கூட முடியாமல் போகிறது. 

செயல்படா கணக்கு (NPA) பட்டியலில் சேர்க்கப்படும் தொழில் முனைவோர் தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாமல் முடக்கப்படும் நிலை இருப்பதால் தாங்கள் இதில் தக்க கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஜனவரி 2020 முதல் வங்கி கடன்களை செலுத்த இயலாத தொழில்முனைவோர்களின் வங்கி கடன் கணக்குகள், செயல்படா கணக்கு (NPA) பட்டியலில் சேர்க்கப்படாமல் தடுத்து, தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்திட உதவிட வேண்டும். 

தமிழக மின்சார வாரியம் தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு குதிரை சக்திக்கும் ( ஹார்ஸ் பவர் ) குறைந்த பட்ச தொகையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த பேரிடர் காலத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு, இந்த குறைந்த பட்ச தொகையை முழுமையாக நீக்குவதோடு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் எனவும் மின் கட்டணம் செலுத்த 6 மாத கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி கோவையில் உள்ள இந்த தொழிற்சாலைகளை கடுமையான சரிவிலிருந்து மீட்கப்பட உதவிட வேண்டும். 

மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, தொழில் கடன்களுக்கான வட்டியையும், மாதத் தவணையையும் ஜுன் மாதம் வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தது. இது செப்டம்பர் – 2020 வரை நீட்டிக்கப்படவேண்டும் . மேலும் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யாமல், அதை அசலுடன் சேர்த்து நிலுவைத் தொகையை அதிகப்படுத்துவதால் மேலும் கடன் சுமை அதிகரிக்கும். ஆகவே கடனுக்கான வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என எம்எல்ஏ நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...