நீலகிரி: கொரோனா பரவலை எதிர்கொள்ளும் நடவடிக்கைக்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களின் சார்பாக ரூ.1 இலட்சத்து ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினர். அப்போது, உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உட்பட பலர் உடனிருந்தனர்.