கோவை: கோவையில் பணியாற்றும் போலீசார், பாதுகாப்பு பணியில் உள்ளோர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஹிந்து பொருளாதார மன்றம் சார்பில் ஒரு லட்சம் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் ஹிந்து பொருளாதார மன்றம், பெரும்பாலான நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. கோவையில் உள்ள கிளைக்கு ஆர்ய வைத்திய பார்மஸி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணக்குமார் தலைவராக உள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில்,கோவை கிளையின் சார்பில், சின்னவேடம்பட்டியில் உள்ள ஸ்ரீவத்சா லன்ச் பாக்ஸ் மற்றும் சிஎம்எஸ் டிரஸ்ட் உடன் இணைந்து, தினமும் 1500 பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டு, புலம் பெயர்ந்தவர்கள், ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது, ஊரடங்கு முடியும் வரை தொடரும் எனவும் இந்த கால கட்டத்திற்குள் 50,000 முதல் 60,000 பேருக்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக விலகளுக்கு அடுத்தபடியாக முக கவசம் மிகவும் முக்கியமானது. ஹிந்து பொருளாதார மன்றம் சார்பில், கோவையில் பணியாற்றும் போலீசார், பாதுகாப்பு பணியில் உள்ளோர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு லட்சம் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.
துணியால் ஆன ஏற்றுமதி தரமிக்க இந்த கவசம், மீண்டும் சோப்பு போட்டு கழுவி பயன்படுத்த முடியும். இவை அரசிடம் ஒப்படைத்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் தவணையாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி தமிழக உள்ளாட்சி மற்றும் அமலாக்கத்துறை அமைச்சர், எஸ்.பி.வேலுமணி அவர்களிடம், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முன்னிலையில் வழங்கப்பட்டது.