கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அசோகன் இடமாற்றம்!

கோவை: கோவையில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒரு சில இடங்களில் போதுமான வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

அதேபோல, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில சுகாதார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். 

மேலும், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு பணி முடிந்த பிறகு இஎஸ்ஐ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுத்த சரியான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து கட்டுப்பாடுகளும் அரசு மருத்துவமனை டீனின் கீழ் இருந்தன. இது பயிற்சி மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் கம்யூனிட்டி மெடிசன் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் காளிதாஸ் கோவை அரசு மருத்துவமனையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...