நீலகிரி: கூடலூர் அருகே பசுமாட்டை புலி தாக்கி கொன்ற இடத்தில், தானியங்கி கேமரா வைத்து, புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க துவங்கினர்.

கூடலூர் மண்வயல் அம்பலமூலா கொரவயல் பகுதியில் நேற்று முன்தினம், அதிகாலை மாட்டு கொட்டகையில் புகுந்த புலி, வேணுகோபால் என்பவரின் பசுமாட்டை தாக்கி கொன்றது.
இதையடுத்து, அப்பகுதியில் வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், வனச்சரகர் ராமகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதியில் நான்கு தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் மக்கள் நிம்மதி அடைந்தனர்.