கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்குள்ளான சமூக ஆர்வலருடன் தொடர்பில் இருந்ததாக மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் என 72 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனோ அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வெளியாகியது.
இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் அவரை 14 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பினர்.
ஆனால், அவர் குறிப்பிட்ட நாட்கள் முடிவதற்கு முன்பே காவல்துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கும் தன்னார்வலர் பணிக்கு சென்றார். இந்த நிலையில் முதியவருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இவருடன் தொடர்பு இருந்ததாக 32 போலீசார் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மீதமுள்ள 40 பேரின் முடிவுகள் இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.