திருப்பூரில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் கைது - 277 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து குவாட்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 277 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து குவாட்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 277 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

திருப்பூர் கொடி கம்பம் பகுதியில் உள்ள வீட்டில் மதுபானங்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, நாகேந்திரன் என்பவர் வீட்டினுள்ளே மதுவை மறைத்து வைத்து வீட்டின் பின்புறமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார், அவரிடமிருந்த 277 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் 120 ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

மேலும், தலைமறைவாக உள்ள பெருமாநல்லூர் சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கொடுத்த ஊழியர்கள் இருவரை தேடி வருகின்றனர். பிடிபட்ட நாகேந்திரனை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...