கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறியதாக 578 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறியதாக 578 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி போலீசார் தற்போது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறியதாக 578 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 523 மோட்டார் சைக்கிள்கள் 15 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கோவை புறநகரில் ரூ.41,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமல் சென்றதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நோய்தொற்று சட்டத்தின் கீழ் 19 பேர் கைது செய்யப்பட்டு இவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.