கோவை: கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சக பயிற்சி மருத்துவர்கள் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றினால் பொதுமக்கள் அதிகாரிகள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் இருவர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இந்த பயிற்சி மருத்துவர்கள் தொடர்பு கொண்ட இடங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதில் முக்கியமாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிஆர்ஆர்ஐ குவாட்டர்ஸில் இருக்கும் 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யாருக்கும் தொற்று இல்லையென தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மற்ற மாணவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.