தமிழகத்தில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,242ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,242ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் இந்த தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொற்று பரவலின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்தநிலையில் இன்று தமிழகத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.