நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அரசின் டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் வியாழக்கிழமை முதல் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் டேன் டீ தொழிற்சாலைக்கு உட்பட்ட கரன்சி, பக்காசூரன் மலை, ட்ரூக், காட்டேரி உள்ளிட்ட டேன்டீ நிறுவனத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் கடந்த வாரம் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், டைகர்ஹில் டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் டேன்டீ தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கான சம்பள பணம் தந்தால் மட்டுமே பணிக்கு வர முடியும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் டைகர் ஹில் மணி, எஸ்.காேபி ஆகியாேர் கிளை மேலாளர் புஷ்பராஜிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவெடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் நாளை முதல் பணிக்கு செல்வதாக உறுதியளித்தனர்.