கோவையில் உள்ள 15 அம்மா உணவகங்களில் நாளை முதல் முட்டையுடன் இலவச உணவு வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் நாளை முதல் முட்டையுடன் சேர்த்து உணவு இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் நாளை முதல் முட்டையுடன் சேர்த்து உணவு இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, கோவை மாவட்டத்தில் 2140 பேருக்கு பரிசோதனை செய்ததில் 126 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது எனவும் நோய்தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தும் பணியும், வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கோவையில் 12 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் 7 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, நாளை முதல் கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் முட்டை வழங்கப்படும் என தெரிவித்த அவர், தினமும் 15 அம்மா உணவகங்களில் 18000 பேர் சாப்பிடுகின்றனர் என்றார். அம்மா உணவகங்களில் சாப்பிடுபவர்களுக்கான செலவை கோவை மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறினார்.

கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது எனவும் முழுமையாக கொரோனா நோய் கட்டுப்பட பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் 15 நாட்கள் கட்டுப்பாடாக இருந்து விட்டால் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோவையில் அரசு மருத்துவமனை முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமல் அவதிப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம் என தெரிவித்தார்.

முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டார் ஓட்டலுக்கு நிகரான பெரிய ஓட்டல்களில் ரூம் தருவதற்கு அறிவுறுத்தி இருக்கின்றோம். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட இருப்பதாகவும் முதுகலை மருத்துவ மாணவர்களை கவனமாக இருக்க சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். 

கோவையில் என்.95 முக கவசம் தேவையான அளவு இருக்கின்றது எனவும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தரமான உணவு கொடுக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கின்றோம் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...