கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவமனையில் உபயோகிக்கப்படும் குறைந்த விலையிலான வெண்டிலேட்டர் தயாரிப்பு

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவமனையில் உபயோகிக்கப்படும் குறைந்த விலையிலான வெண்டிலேட்டர் உருவாக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவமனையில் உபயோகிக்கப்படும் குறைந்த விலையிலான வெண்டிலேட்டர் உருவாக்கப்பட்டு உள்ளது. 

சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ஹை டெக் என்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனம் சி.என்.சி ஹைட்ராலிக் இயந்திரம் என பல்வேறு என்ஜினியரிங் பொருட்கள் தயாரித்து வருகிறது.



இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மருத்துவமனையில் உபயோகிக்கப்படும் குறைந்த விலையிலான வெண்டிலேட்டரை உருவாக்கி உள்ளது. தற்போது வெண்டிலேட்டர்கள் சந்தையில் ரூ.8300ல் இருந்து 12000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், குறைந்த விலையில் இது கிடைக்கப் பெற உருவாக்கி உள்ளதாகவும் 5900 ரூபாயில் இந்த வெண்டிலேட்டரை வழங்க தங்களால் முடியும் என அந்நிறுவன நிர்வாக இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

அதேபோல, நாள் ஒன்றுக்கு 100 வெண்டிலேட்டரை தயாரித்து தங்களால் வழங்க முடியும் எனவும் மெக்கானிக்கல் மற்றும் எலக்டிரிக்கல் முறையில் இவை இயங்கும் என தெரிவித்தார். அடக்க விலையில் இதனை தயாரித்து உள்ளதாகவும் எளிதில் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இது தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், அரசு அனுமதி அளித்து இதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதனை செய்து வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...