கோவை: கோவை குனியமுத்தூர் அருகே தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்று பெண் ஆய்வாளரை தகாத வார்த்தைகளளால் பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் அம்மன் கோவில் சந்திப்பு அருகே கொரோனா தொற்று இருப்பதால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குனியமுத்தூர் எஸ்.என்.ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்த முகமது சபிக்(34) என்ற இளைஞர் தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் உதவி ஆய்வாளர் சௌபர்ணிகா இங்கு யாரும் செல்லக்கூடாது என தடுத்துள்ளார்.
அப்போது, பெண் ஆய்வாளரை தகாத வார்த்தைகளளால் பேசி முகமது சபீக் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உதவி ஆய்வாளர் சௌபர்ணிகா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து, தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்ற முகமது சபிக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவிநாசி சிறையில் அடைத்தனர்.