திருப்பூர்: கொரோனா பாதிப்படைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது எனவும் கொரோனா பாதிப்படைந்திருந்தால் அதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூரில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ள நிலையில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், ஜமாத் அமைப்பு சார்பில் திருப்பூர் மாநகர பகுதியில் 17 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்கள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
திருப்பூரில் இஸ்லாமியர்களால் மட்டுமே கொரோனா பரவுவதாக தவறான வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் அதே போல், கொரோனா பாதித்தவர்களின் பெயரை வெளியிடக்கூடாது என்று கூறிய நிலையில் தற்போது அவர்களின் முழு விபரமும், சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்டிப்பதோடு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.