கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி உக்கடம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களை சிக்னல்களில் அரைமணி நேரம் காக்க வைத்த காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாது பொதுமக்கள் சாலைகளில் இயல்பாக வந்து வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் சாலைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வரும் வாகனங்களை சிக்னலில் அரை மணி நேரம் நிறுத்தி வைத்து பின்னர் அனுப்பும் புதிய நடைமுறையை இரண்டு தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளனர்.
இதனிடையே, மூன்றாவது நாளாக இன்று கோவை உக்கடம் பகுதியில் வரக்கூடிய வாகனங்களை அரை மணி நேரம் நிறுத்தி வைத்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வழங்குவதோடு, முக கவசம் அணிவதையும், சமூக விலகல் குறித்து உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜவேல் மற்றும் ஆர்.எஸ் புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாதேவி, உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பாலச்சந்தர், சிவனோ, ராமு, ஏட்டு ரமேஷ் பாபு மற்றும் காவலர்கள் கொரோனா தடுப்பு அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.