கோவை: கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் நமது மத்திய மாநில அரசுகள் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல நமது தமிழக சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேரமும் பொது மக்களுக்கு உதவும் வகையில் கால் சென்டர்கள் அமைத்து உச்சகட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ,செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆபத்தான இந்த நோயுடன் போராடும் மருத்துவ குழுவினருக்கு போதுமான எதிர்ப்பு சக்தி உணவுகளும், அவர்கள் சிகிச்சை கொடுக்கும் பொழுது தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களும், வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் ஒருசில நிர்வாக குளறுபடிகளால் சில இடங்களில் தேவையான உபகரணங்கள் கிடைப்பதில்லை எனவும், அதேபோல பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான உணவுகள் அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் மேலோங்குகிறது. இதன் தொடர்ச்சியாக பயிற்சி மருத்துவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதில் குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சி.ஆர்.ஆர்.ஐ,. குவாட்டர்ஸில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு நேற்று இரவு முதல் தற்போது மதியம் வரை மூன்று வேளையும் முறையான உணவுகள் சரியான வேளையில் வழங்கப்படவில்லை என பயிற்சி மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சிஆர்ஆர்ஐ விடுதி உணவகத்தில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் (பி.ஜி),இளநிலை பயிற்சி மருத்துவர்கள்(சி.ஆர்.ஆர்.ஐ) ஆகிய இரண்டு பயிற்சி மருத்துவர்களும் என கிட்டத்தட்ட 550 பேர் தினமும் உணவு உண்டு வருகின்றனர்.
ஆனால் இந்த விடுதி உணவகத்தை நம்பி இருக்கும் இந்த மருத்துவர்களின் நிலைமை தற்போது மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
நேற்று இந்த விடுதியை சேர்ந்த இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் விடுதியில் உள்ள உணவகம் நேற்று இரவு முதல் மூடப்பட்டது.
இதனால் உணவகத்தை நம்பியுள்ள பயிற்சி மருத்துவர்கள் 550 பேர் நேற்று கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உணவு வசதி செய்து கொடுக்க கோரி மனுவாயிலாக வேண்டுகோள் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ட்விட்டர் மூலம் பயிற்சி மருத்துவர்களின் உணவு வேண்டிய கோரிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலருக்கு அனுப்பப்பட்டது. பின்னர் செயலர் பீலா ரஜேஷ் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
குறைந்த எண்ணிக்கையில் தரமற்ற உணவா?
இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் விடுதிக்கு சென்று உணவுகளை கொடுத்தனர்.
ஆனால் பயிற்சி மருத்துவர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு உணவு தேவைப்படும் பட்சத்தில் குறைந்த அளவில் உணவு கொண்டு வந்ததற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல உணவு காலதாமதமாக, தரமற்ற நிலையில் கொண்டுவரப்பட்டதற்கு நியாயம் கேட்டு உதவி இருப்பிட மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து உதவி இருப்பிட மருத்துவர் விடுதியை விட்டு சென்று விட்டார்.
இதையடுத்து கிடைத்த உணவுகளை உண்டு சிலர் தங்களின் மருத்துவப் பணிக்கு சென்றனர். சிலர் உணவுகளை உண்ண விருப்பமின்றி பணியை புறக்கணித்தனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பும்கூட மீண்டும் மதிய உணவு குறைந்த எண்ணிக்கையில் காலதாமதமாக வந்துள்ளது. முறையான கோரிக்கை வைத்த பின்பும் மதிய உணவு தாமதமாக மட்டுமின்றி, பாதி பேருக்கு மட்டுமே குறைந்த அளவிலான பொட்டலங்கள் தான் வந்துள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளனர். அதனால் ஒன்றுகூடி முடிவெடுத்து, உணவை புறக்கணித்தனர்.
இது போன்ற செயல்கள், பல்வேறு சிரமங்களின் மத்தியில் நோயுற்ற மக்களுக்கு சேவை செய்யும் எங்களை போன்றோருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பயிற்சி மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பயிற்சி மருத்துவர் ஒருவர் கூறும்போது:-
நாங்கள் இந்த கொரோனோ பரவல் காலத்தில் எங்களின் உயிர்களை பணயம் வைத்து பணி செய்து வருகிறோம். எங்களது சக பயிற்சி மருத்துவர் இருவருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்களது ஹாஸ்டல் மெஸ் மூடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாங்கள் மக்கள் சேவையில் இறங்க வேண்டிய நேரத்தில் உணவுக்கு வழியின்றி வேதனைப்பட்டு வருகிறோம்.
500க்கும் மேற்பட்டோர் இருக்கும் விடுதியில் 150, 200 பேருக்கு தான் உணவு வருகிறது.
இதனால் உணவுக்கு வழியின்றி வெறுப்படைந்து உள்ளோம். தமிழக அரசு எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் உணவு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இந்த சிரமமான காலத்தில் பணி செய்வது கடினம் என வருத்தத்துடன் தெரிவித்தார்.