நீலகிரி: நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பழங்குடி குடும்பங்களுக்கு முக கவசம் அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அதன் மாவட்ட செயலாளர் பா.மு முபாரக் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் நகர் பகுதிகளில் ஓரளவு நிவாரணப் பாெருட்கள் கிடைத்து வந்தாலும் நகரினை விட்டு வெகு தொலைவில் உள்ள பழங்குடியினர் கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட திமுக சார்பில் குன்னூர் அருகில் உள்ள சின்ன குரும்பாடி, பெரிய குரும்பாடி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் அரிசி, பருப்பு, எண்ணெய், முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் சாலைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் மாநில துணை செயலாளர் அன்வர்கான், நகர செயலாளர் எம். ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் 600க்கும் மேற்பட்ட பழங்குடிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை பொதுமக்களுக்கு இதுபோன்ற இலவச உதவிகள் வழங்கப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தெரிவித்துள்ளார்.