கோவையில் தடையை மீறி பூக்கள் வியாபாரம் செய்த 3 கடைகளை மூட உத்தரவு - விற்பனைக்கு வைத்திருந்த பூக்கள் பறிமுதல்

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பூமார்கெட்டில் தடையை மீறி கடையை திறந்து பூக்கள் வியாபாரம் செய்த 3 கடைகளை மூட உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள், விற்பனைக்கு வைத்திருந்த பூக்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பூமார்கெட்டில் தடையை மீறி கடையை திறந்து பூக்கள் வியாபாரம் செய்த 3 கடைகளை மூட உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள், விற்பனைக்கு வைத்திருந்த பூக்களை பறிமுதல் செய்தனர்.

கோவை பூ மார்கெட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரம் கிலோ முதல் 20 ஆயிரம் கிலோ வரை பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. திருமணம் மற்றும் விஷேச நாட்களில் இந்த விற்பனை 10 டன் வரை விற்பனை செய்யப்படும்.

பூக்களின் வரத்து தொண்டாமுத்தூர், காரமடை, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, நிலக்கோட்டை, மதுரை, சேலம், தருமபுரி, ராயக்கெட்டை, ஹொசூர், பெங்களூரு, தாளவாடி, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரளி, மருகு, துளசி, மரிக்கொழுந்து, மல்லி, முல்லை, ஜாதி, கனகாம்பரம் என ஏழு வகையான ரோஜா மலர்கள், செண்டு மல்லி, செவ்வந்தி என பலவகை பூக்கள் இங்கு விற்பனை செய்யப்படும். இப்பூக்களை கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தினர் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு 144 மேடை கடைகள், 20 கூரை கடைகள், ஸ்டால் கடைகள் 28 என தினந்தோறும் விற்பனையில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி கடையை திறந்து பூக்கள் வியாபாரம் செய்த 3 கடைகளை மூட உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள், விற்பனைக்கு வைத்திருந்த பூக்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் அய்யப்பனை தொடர்பு கொண்ட கேட்டது, வழக்கமாக தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளன்று பூஜை வழிபாடுகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் பூக்கள் வாங்கி செல்வது வழக்கம். பூ விற்பனை மூலம் இரண்டாயிரத்தில் இருந்து 3000 குடும்பங்கள் பயன் பெறுவதாகவும் தற்போது 144 தடை உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதனையும் மீறி வேறு பகுதிகளை சேர்ந்த சிலர் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசின் உத்தரவை அனைவரும் மதித்து நடப்பதே நல்லது. இந்த வருடம் இல்லாவிடில் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டை கொண்டாடலாம் பாதுகாப்பு தான் முக்கியம், இதனை அனைவரும் கடைபிடித்தல் நல்லது என தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...