கோவையில் ஊரடங்கை மீறி வரும் வாகனங்களை சிக்னல்களில் 30 நிமிடம் காக்க வைத்து அறிவுரை வழங்கி அனுப்பும் போலீசார்..! மருத்துவ, மாநகராட்சி ஊழியர்கள் பாதிப்பு

கோவை: கோவையில் இரு சக்கர வாகனங்களில் வரும் பொது மக்களை சிக்னல்களில் அரைமணி நேரம் காக்க வைத்து பின்னர் அறிவுரை வழங்கி காவல்துறையினர் அனுப்பி வைக்கப்படுவதால் மாநகராட்சி ஊழியர், மருத்துவ, வங்கி பணியாளர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

கோவை: கோவையில் இரு சக்கர வாகனங்களில் வரும் பொது மக்களை சிக்னல்களில் அரைமணி நேரம் காக்க வைத்து பின்னர் அறிவுரை வழங்கி காவல்துறையினர் அனுப்பி வைக்கப்படுவதால் மாநகராட்சி ஊழியர், மருத்துவ, வங்கி பணியாளர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பொருட்படுத்தாது பொது மக்கள் சாலைகளில் இயல்பாக வந்து வாகனங்களில் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் சாலைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வரும் வாகனங்களை சிக்னலில் அரை மணி நேரம் நிறுத்தி வைத்து பின்னர் அனுப்பும் புதிய நடைமுறையை நேற்று முதல் துவங்கியுள்ளனர்.

இரண்டாவது நாளாக இன்று கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், லட்சுமிமில்ஸ் உட்பட நகரின் அனைத்து முக்கிய சிக்னல்களிலும் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி அரை மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கின்றனர்.

கோவை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கையால் மாநகராட்சி பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், கேஸ் மற்றும் மாட்டுத் தீவனம் கொண்டு செல்லும் வாகனங்களும் செல்வது தடைபட்டு ஒரே இடத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் என்று சொன்னாலும் காவல் துறை அனுமதி மறுப்பதாகவும் அதிகாலையில் எழுந்து வேலைக்கு வந்து சாப்பிட செல்ல முடியாமல் சிக்னலில் நிற்பதாகவும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, விதிகளை மீறி அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வரும் இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் காலால் எட்டி உதைத்து கடுமையாக தண்டிக்கவும் தயங்குவதில்லை.

அரை மணி நேரத்துக்கும் மேலாக சிக்னல்களில் பொதுமக்களை நிறுத்துவதால், தனி நபர் இடைவெளி இன்றி ஓரே இடத்தில் பொது மக்கள் நிற்கும் நிலை ஏற்படுகிறது. அரை மணி நேரம் கழித்து காவல்துறையினர் பொது மக்களுக்கு மைக் மூலம் அறிவுரை வழங்குகின்றனர். அதன் பின்னர் ஒவ்வொருவராக என்ன காரணத்திற்காக வந்தார்கள் என்பதை விசாரித்து அத்தியாவசிய தேவை இல்லாமல் வந்தவர்களின் இரு சக்கர வாகன சாவிகளை பறிமுதல் செய்து, ஒவ்வொருவரிடமும் முகவரி, போன் நம்பர் அனைத்தையும் வாங்கி கொண்டு பின்னரே அனுமதிக்கின்றனர்.

தனி நபர் இடைவெளியின் அவசியம் குறித்து அரசு ஒருபுறம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், மற்றொரு புறம் நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினரே பொது மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டமாக நிறுத்தி அறிவுரை வழங்குவது அரசின் நடவடிக்கைகளுக்கு முரணான ஒன்றாகவே இருக்கின்றது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...