நீலகிரி: கூடலூர் அருகே வீட்டின் ஜன்னலை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவத்தில் தேயிலை தொழிலாளி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். யானைகள் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் பாண்டியார் டான்டீ பகுதியை (அரசு தேயிலைத் தோட்ட கழகம்) ஒட்டிய குண்டம்புழா வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்த யானைகள், கடந்த வாரம் பாலமேட்டில் சிவராமன் என்பவர் வீட்டின் சமையலறையை சேதப்படுத்தியது. மேலும், நேற்று முன்தினம் இரவு பாண்டியார் டான்டீ சரகம் எண்-2 தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட யானைகளை, வனத்துறையினர் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு மீண்டும் அப்பகுதியில் நுழைந்த அந்த யானைகள், பாலா என்பவர் வீட்டின் ஜன்னலை சேதப்படுத்தி, அவர் படுத்திருந்த கட்டிலின் மீது தள்ளியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சத்தமிட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். இச்சம்பவத்தால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த ஒருவாரமாக இப்பகுதியில் முகாமிட்டு, மக்களை அச்சுறுத்திவரும் யானைகளிடமிருந்து நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்க, வனத்துறையும், டான்டீ நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.