நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு 1,471 நபர்கள் பல்வேறு விமான நிலையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகை புரிந்துள்ளதாகவும் இவர்களில் 1,190 நபர்கள் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பினை முடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;-
நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு விமான நிலையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகை புரிந்த 1,471 நபர்களில் தற்போது, 281 நபர்கள் தொடர்ந்து வீட்டுக் கண்காணிப்பில் உள்ளார்கள். குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வந்த 8 நபர்களை மருத்துவப் பரிசோதனை செய்ததில், 7 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர் கண்காணிப்பில் உள்ளார்கள். குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வந்த 8 நபர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 30 நபர்களுக்கு கோவை மற்றும் சென்னை பரிசோதனை நிறுவனங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குடும்ப உறுப்பினாகளில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இவர்களை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்கள் தங்களின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறும், வெளியூர் செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொது இடங்களில் நெருக்கத்தை தவிர்க்கவும், இருமல், சளி இருக்கும் பொழுது, கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொள்ளவும், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் தங்களையும், வீட்டின் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றவர், கை படும் இடங்களான கதவு, தாழ்ப்பாள், ஜன்னல், மேசை போன்ற இடங்களில் ஒரு சதவீதம் ஹைப்போ குளோரைட் திரவம் அல்லது 5 சதவீதம் லைசால் திரவம் கொண்டும் சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், நோய் அறிகுறி தென்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நீலகிரியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;-
நோயாளி 1. வயது 42. ஆண், காந்தல் பகுதி, உதகை.
நோயாளி 2. வயது 50, ஆண், காந்தல் பகுதி, உதகை.
நோயாளி 3. வயது 49, ஆண், இராஜாஜி நகர், குன்னூர்.
நோயாளி 4. வயது 58, ஆண், மெயின் பஜார், கோத்தகிரி.
நோயாளி 5. வயது 46, ஆண், இராஜாஜி நகர், குன்னூர்.
நோயாளி 6. வயது 47, ஆண். எஸ்.கைகாட்டி, கோத்தகிரி.
நோயாளி 7. வயது 60, ஆண், மெயின் பஜார், கோத்தகிரி.
நோயாளி 8. வயது 19, ஆண், காந்தல் பகுதி, உதகை.
நோயாளி 9. வயது 22, ஆண், மெயின் பஜார், கோத்தகிரி.