கோவையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு காரணங்களுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்!

கோவை: ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு காரணங்களுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.

கோவை: ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு காரணங்களுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மக்கள் வெளியில் நடமாடக் கூடாது எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவை என கேட்டு கொள்ளப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டரை தாண்டி வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

இதனையும் மீறி மக்கள் தேவைகளை தவிர்த்து வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை அபராதம், வாகன பறிமுதல் என கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை மீறி வெளியே வருபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்து காவல்துறை எச்சரித்து அனுப்பியது. 



பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர அடிக்கடி வெளியே வருவதால், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், மருந்து விற்பனை செய்பவர்கள், மருத்துவ உபகரணங்கள் செய்பவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் ஆகியவர்கள் பொதுமக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதை தவிர்த்த பின்னரும் மக்களின் கூட்டம் அதிகரித்திருப்பதால் என்ன செய்வது எனத்தெரியாமல் சில மணி நேரம் பொதுமக்களை காவல் துறையினர் காக்க வைக்கின்றனர்.



இருப்பினும் பல்வேறு காரணங்களை கூறி அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். அவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தி காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்து வருகின்றனர். இருந்த போதிலும் மக்கள் கலைந்து செல்லாமல் அங்கே நின்றனர். ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...