ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை!

கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனாவசியமாக பயணிக்கும் இருசக்கர வாகனங்களில் மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்து போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனாவசியமாக பயணிக்கும் இருசக்கர வாகனங்களில் மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்து போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனிமனித இடைவெளிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல, சாலையில் அனாவசியமாக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அனாவசியமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவுகளும் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், போலீசார் தற்போது அனாவசியமாக பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அவர்கள் ஓட்டி வரும் இரு சக்கர வாகனங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுக்கின்றனர். 

இதனை தொடர்ந்து, இரண்டாவது முறை பயணித்தால் மீண்டும் எச்சரிக்கை விடுக்கின்றனர். பின்னர் மூன்றாவது முறை தொடரும் பட்சத்தில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.

இதையடுத்து, இன்று கவுண்டம்பாளையம் அருகே போலீசார் அனாவசியமாக பயணிக்கும் பல வாகனங்களில் முதற்கட்டமாக மஞ்சள் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...