வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்!

கோவை: வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு போராடிப் பிடித்த வனத்துறையினர் பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.

கோவை: வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு போராடிப் பிடித்த வனத்துறையினர் பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். 

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் மணி என்பவர் வீட்டில் புகுந்த நல்லபாம்பு ஒன்று சர்வ சாதாரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையை கடந்து சென்றது.

அப்போது, சாலையில் சென்றவர்கள் நல்ல பாம்பு சாலையில் செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். 



இதனால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். இதனை பார்த்த பாம்பு அருகில் இருந்த கோர்ட் சாலையில் உள்ள தண்ணீர் குழாயில் புகுந்து கொண்டது. இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.



பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பாம்பை பையிலிட்டு கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இது அதிக விஷமுள்ள கோதுமை நாகம் என்று தெரிவித்தனர். பாம்பு பிடிபட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பை ஏற்பட்டது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...