கோவையில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.
கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் இந்த தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொற்று பரவலின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மொத்தம் 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.