கோவை கோட்டைமேடு பகுதியில் மோட்டார் பொருத்திய டிராக்டர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கோட்டைமேடு பகுதியில் கொரோனா தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக, மோட்டார் பொருத்திய டிராக்டர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
பொதுமக்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மாநகராட்சியில் டிராக்டரில் பொருத்தப்பட்ட ஸ்பேரேயர் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மண்டலத்திற்கு 2 வாகனங்கள் வீதம் 10 வாகனங்களிலும், டாடா ஏசி வாகனத்தில் 5000 லிட்டர் நாசினி மருந்து கொண்டதாக 5 வாகனங்களிலும், ஸ்பேரேயர் கருவிகள் மண்டலத்திற்கு 70 வீதம் 350 கருவிகள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியா தனலிங்கம் அவர்கள், மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ் அவர்கள், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி அவர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.