கோவை: நாளை ஒரு நாள் மட்டும் கறி கடைகளை திறந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உள்ளார். நாளை கொண்டாடப்பட இருக்கும் ஈஸ்டர பண்டிகையை ஒட்டி, நாளை ஒரு நாள் மட்டும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி வேண்டும் என கறி கோழி மட்டும் இதர இறைச்சி சங்கங்கள், இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், நாளை கடைகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கறி மற்றும் இதர இறைச்சி வீணாகி விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் அவர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
கோவை: நாளை ஒரு நாள் மட்டும் கறி கடைகளை திறந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உள்ளார்.
நாளை கொண்டாடப்பட இருக்கும் ஈஸ்டர பண்டிகையை ஒட்டி, நாளை ஒரு நாள் மட்டும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி வேண்டும் என கறி கோழி மட்டும் இதர இறைச்சி சங்கங்கள், இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், நாளை கடைகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கறி மற்றும் இதர இறைச்சி வீணாகி விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் அவர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
அதையடுத்து, அவர்கள் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், கு ராசமணி நாளை ஒரு நாள் மட்டும் இறைச்சி கடைகளை திறந்து கொள்ளலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பேக்கெட் செய்து கொடுக்கும் வகையிலும் சமூக இடைவெளி விட்டு மக்கள் கறிகளை வாங்கும் வகையில் நாளை விற்பனை செய்யப்படும் எனவும் நாளை மதியம் வரை திறக்க உள்ளோம் என கறிகோழி விற்பனை சேர்மன், சின்னசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்க தலைவர் சின்னதம்மபி கூறுகையில்,
கோவையில் கறிக்கோழி தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. வழக்கமான நாட்களில் தினம் ஒன்றுக்கு 30,000 கிலோ, புதன்கிழமை 60,000 கிலோ. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் 1.20 லட்சம் கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது, என தெரிவித்தார்.