கோவை: கோவையில் காய்கறி ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனத்தில் மதுபானங்களை மறைத்து எடுத்து சென்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் காய்கறி ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனத்தில் மதுபானங்களை மறைத்து எடுத்து சென்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
கோவில்பாளையம் அருகே கோட்டையபாளையம்-கொண்டயபாளையம் பகுதி சாலையில் சரக்கு வாகனத்தில் மதுபானங்களை எடுத்து செல்லப்படுவதாகக் கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த TN 66 E 5677 என்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த வாகனம் காய்கறி விற்பனைக்கு உபயோகிக்கும் வகையில் தார்பாய்கள் மூடி இருந்தது. போலீசாரின் சோதனையில் வாகனத்தில் 60 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வாகனத்தில் இருந்த கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், அருண்குமார் மற்றும் குரும்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை 437/20 4(1) (a) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.