கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாயையும் சேயையும் தரையில் படுக்கவைத்த அவலம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாயையும் சேயையும் தரையில் படுக்கவைத்த அவலம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அளவில் சிறந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அரசு பல்வேறு நிதிகளை வழங்கி நலத்திட்ட பணிகளை மேற்கொண்டாலும் இங்கு நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் பல நேரங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதேபோல, அடிக்கடி நோயாளிகள் படுக்கை வசதிகள் இன்றி தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்த சில மணிநேரங்களில் தாயையும் சேயையும் தரையில் படுக்க வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் கூறும் போது;-
குழந்தையை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் வார்டுக்கு மாற்றப்பட்டு தாயையும் சேயையும் தரையில் படுக்க வைத்தனர். அவர்களுக்கு உரிய மெத்தை வசதிகளைக் கூட மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை.
பின்னர் இதனை கண்ட அவரின் கணவர் வாக்குவாதம் செய்த பின்புதான் படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டது. மேலும், குழந்தையை பெற்றெடுத்த தாய் சேய் மற்றும் பல நோயாளிகள் இப்படி தரையில் படுக்கும் அவலம் இங்கு உள்ளது. இதை அரசு தலையிட்டுச் சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.