நீலகிரி: குன்னூரில் தடையை மீறி மூன்று இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வைக்க வேண்டியதும் அவசியமாகும். இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வந்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குன்னூரில், ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், ராஜாஜிநகர் சுற்றுப்புற பகுதிகள் 'சீல்' வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆணையர் பாலு மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் மால் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன், நகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓட்டுப்பட்டறை, ஸ்டான்லி பார்க் பகுதிகளில், 57 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்து, குப்பை லாரியில் ஏற்றப்பட்டது. மேலும், காந்திபுரம் அருகே இந்திரா நகரில், 15 கிலோ வீட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சுகாதார ஆய்வாளர் மால்முருகன் கூறுகையில், ''வரும், 14ம் தேதி வரை எந்த இறைச்சியும் விற்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் வைத்து கோழி இறைச்சி விற்பனை செய்வது தெரியவந்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்றார்.