கோவையில் மது கிடைக்காத விரக்தியில் கிருமி நாசினியை குடித்த இளைஞர் உயிரிழப்பு

கோவை: கோவையில் மது கிடைக்காத விரக்தியில் கிருமி நாசினியை குடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் மது கிடைக்காத விரக்தியில் கிருமி நாசினியை குடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட்களைத் தவிர்த்து மற்ற பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுபான கடைகள் அடைக்கப்பட்டதால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும், கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுவை வாங்கி குடிக்கின்றனர். தடை மீறி விற்பனை செய்பவர்களிடம் இருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. 

சூலூர் தாலுக்கா அலுவலக வீதியை சேர்ந்தவர் பெர்னார்ட். இவருக்கு ஏஞ்சல் சாண்டினி(14), ஜெயஷாலினி(12), ஜெனிலியாமேரி(6) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 13 வருடங்களாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்துள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு கம்பெனி சார்பில் கிருமி நாசினி (சானிடைசர்) கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கிருமி நாசினியை (சானிடைசர்) வீட்டிற்கு கொண்டு வந்த பெர்னார்ட், அதில் தண்ணீர் கலந்து கடந்த இரண்டு நாட்களாக குடித்து வந்துள்ளார். நேற்று சானிடைசரை குடித்து உறங்கியவர் வாந்தி எடுத்துள்ளார்.

இதனை கண்ட அவரது மனைவி பிரியா அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வரும் வழியிலேயே பெர்னார்ட் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, பிரியா அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபழக்கத்தின் காரணமாக மது கிடைக்காமல் சானிடைசரை குடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...