காரமடையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு கிருமிநாசினி, முக கவசம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கிய தி.மு.கவினர்!

கோவை: காரமடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் தி.மு.க சார்பில் கிருமிநாசினி, முக கவசம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவை: காரமடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் தி.மு.க சார்பில் கிருமிநாசினி, முக கவசம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. 

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இருப்பினும் சுகாரதார பணியினை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பது துப்புரவு பணி என தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இதேபோல், காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் இன்று தி.மு.க சார்பில் வழங்கப்பட்டன.



காரமடை பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், சானிடரி, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் குடும்பத்திற்குத் தேவையான அரிசி, காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்களையும் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் வழங்கினார். 

மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எப்போதும் வெயிலில் பணியாற்றும் அவர்களுக்கு பழங்களும் வழங்கப்பட்டன. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...