கோவை: கோவை தெற்கு உக்கடம் அல்-அமீன் காலனியில் 144 தடை உத்தரவை மீறி பணம் வைத்து சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 38 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை தெற்கு உக்கடம் அல்-அமீன் காலனியில் 144 தடை உத்தரவை மீறி பணம் வைத்து சூதாடுவதாக பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய உக்கடம் பிலால் நகரை சேர்ந்த முஹம்மது பாரூக்(54) அல்-அமீன் காலனியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(54) கெம்பட்டி காலனி சேர்ந்த சுரேஷ்குமார்(37) கரும்புக்கடை சேர்ந்த அப்பாஸ் (45) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 38,750 பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.