கோவை: கொரோனா வைரசை அழிப்பதாகக் கூறும் கிருமிநாசினி சுரங்கங்களை அமைக்க வேண்டாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிருமிநாசினி சுரங்கங்களின் செயல்திறன் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வீடியோ கான்பரன்சிங்கின் மூலம் கலந்துரையாடினார். அப்போது, சுரங்கங்களில் ப்ளீச்சின் முக்கிய மூலப்பொருளான சோடியம் ஹைபோகுளோரைட்டை தெளிப்பது வைரசை விட மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் முதல்வருக்கு தெரிவித்தனர்.
மேலும், சுரங்கங்களின் செயல்திறனுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய நிபுணர்கள், சோடியம் ஹைபோகுளோரைட்டை தெளிப்பது வைரசைக் கட்டுப்படுத்தாது என்றனர். மேலும், இதை அதிக அளவில் பயன்படுத்தினால், அது கண்களுக்கும் தோலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் என்று முதல்வரிடம் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, எந்தவொரு விஞ்ஞான ஆய்வும் இல்லாத கிருமிநாசினி சுரங்கங்களை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்ட சோப்புடன் கைகளை கழுவுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தை இடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற பத்து கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.