நீலகிரியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட விரக்தியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 6 பேர் கைது - 3 லிட்டர் சாராயம் பறிமுதல்

நீலகிரி: நீலகிரியில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுக்கடை இல்லாத விரக்தியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி: நீலகிரியில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுக்கடை இல்லாத விரக்தியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மதுக்கடை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மட்டுமே நடைபெறுகிறது. 

இந்நிலையில், மதுக்கடை இல்லாத விரக்தியில் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு பந்தலூர் அடுத்த நெல்லியாளம் அம்மன் குண்ணு கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சேரம்படி காவல்துறைக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய ராஜ்குமார், விஸ்வநாத், அற்புத சாமி, பன்னீர்செல்வம், நாகராஜ், தீபக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் 1777 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 653 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...