கோவை: கோவையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் மருத்துவமனையில் உள்ள கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ தொற்றின் காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இப்படியிருக்க இன்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை மருத்துவமனை நிர்வாகத்தினர் சாப்பிட அனுமதிக்கவில்லை என
கொரோனோ வார்டில் கண்காணிப்பில் இருந்த இளைஞர் மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த கண்ணாடியை உடைத்த 27 வயதுடைய நபர்,
என்பதும் அவர் கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்தவர் என்பதும்
தெரியவந்ததுள்ளது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.